Thursday, March 24, 2011

Ramana maharishi about siddhars

Read more about Siddhars and How Ramana maharishi describes about them.on this link:
http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=2487.0

Sunday, February 6, 2011

சித்தம்

சித்தம்

இந்த இடத்திற்கு வந்ததும் எதுவும் இல்லாமற் போய் விட்டது.

தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்.

சித்தன் போக்கு சிவன் போக்கு.

சித்தம் + அந்தம் = சித்தாந்தம்.
முற்றும் முடிந்த முடிபு.

சித் + அம்பரம் = சிதம்பரம்

சித் + அம்பலம் = சிற்றம்பலம்

சித் + ஆகாசம் = சிதாகாசம்

சத் + சித் + ஆனந்தம் = சச்சிதானந்தம்

Saturday, January 8, 2011

மன அமைதி



மனம் அலைபாய்கிறது , தடுமாறுகிறது என்று கூறுபவர்கள் பலர். மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும்.அப்படி தடுமாறும்போது நாம்  எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும். பல பிரச்சனைகளில் போய் முடியும் . கவலைப்பட்டு நீங்கள் உங்கள் உடல் நலத்தையும் கெடுத்து , மன அமைதியையும் இழக்கிறீர்கள் . எப்போதும் மகிழ்ச்சியாகவும் , மனநிறைவுடனும் இருந்து கொள்ளுங்கள் . 

நடப்பவை நடக்கட்டும் , எல்லாம் அவன் செயல் என்று நினைத்து கொள்ளுங்கள் . நல்லவைகள் செய்யும் போது மற்றவர்களை பாராட்டுங்கள் . மற்றவர்களை மதியுங்கள் , மனதார வாழ்த்தி , பாராட்டுங்கள் . குடும்ப அங்கத்தவர்கள் , உறுப்பினர்களோடு அன்புடனும், பாசத்துடனும் இருங்கள் . சண்ட, சச்சரவு என்று இராதீர்கள் . இப்படியான சூழ்நிலைகளால் தான் மனம் அமைதி பெரும் . பிரச்சனைகள், சண்டைகள் என்று இருக்கும்போது தான் மன அமைதி சீர்குலைகிறது .
http://anandyogahimalayas.com/images/meditation-%20posture.jpg
எமது மன அமைதியை, நிம்மதியை குலைப்பவர்கள் பெரிதும் நம்மை பேச்சால், செயல்பாடுகளால் எமது மன அமைதியை குலைக்கிறார்கள் . மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும். மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும்.  கோபக்காரர்கள் போல இருப்பார்கள் . எதுக்கெடுத்தாலும் திட்டி தீர்த்து விடுவார்கள் . மன அமைதி இல்லாதவர்களுக்கு கோபமும் அதிகம் வரும் .

மனம் அமைதி அடைய தியானம் மிகவும் நல்லது . ஒரு 10 நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருக்கலாம் . மனதில் பாரம் குறைந்த மாதிரியாக இருக்கும் . புத்துணர்வோடு இருப்பீர்கள் . அல்லது தேவாரங்களை படித்து இறை சிந்தனையில் இருக்கலாம் . 





எது சரி?

எது சரி?
மனம், புத்தி, சித்தம், ஆகாசம் அல்லது ஆகாயம்
இவை அனைத்தும் ஆத்மாவின் ஒவ்வொரு படிக்கல்லே.
மனம் என்பது மாயையினால் கட்டுண்ட உயிரின் மயக்க நிலையேயாகும்.
அடுத்த படி புத்தி, இது போதம் அல்லது அறிவு பெற்ற நிலையாகும்.

Sunday, January 2, 2011

சித்தம் பற்றிய கேள்வி

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள் தாம் சித்தர்கள்
என்றுகூறினால் சித்தம் பற்றிய கேள்வி எழுகின்றது
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்
என்று கேள்விப்பட்டிருக்கிறோம்
இது சரியா?